இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் இளையராஜா - கமல் வாழ்த்து | இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து | ஜுன் 1, 2022ல் டிரைலர் வெளியீடு : ஜுன் 1, 2023ல் பட வெளியீட்டு அறிவிப்பு | ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா |
பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த டுவீட்டானது வைரலாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனையடுத்து மற்றொரு டுவீட்டை பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், 'தமிழ்நாட்டில் மதுவினால் என்னை போல் பல அநாதைகள் உருவாகியுள்ளனர். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டர் பதிவுகளை சிறுபிள்ளைத்தனம் என்றும் ஆர்வக்கோளாறு என்றும் அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.