ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சி நடத்த வருமானம் தருவதும், ஆட்சியாளர்களுக்கு முறைகேடாக பணம் தருவதும் மதுபான விற்பனைதான். அரசின் டாஸ்மாக் நிறுவனம் இந்த விற்பனையை செய்து வருகிறது.
தற்போது தமிழக அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாக பல கட்ட அதிரடி சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இந்த முறைகேட்டில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரனும் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. அவரது வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடக்கும் 'பராசக்தி', மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார். அதோடு 'இதயம் முரளி' என்ற படத்தை அவரே தயாரித்து இயக்கவும் செய்கிறார். இதில் முரளி மகன் அதர்வா நடிக்கிறார். இந்த படங்களில் மொத்த பட்ஜெட் 400 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அதன் அடிப்படையில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று அமுலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முறைகேடான பணத்தில் இருந்து இவர்கள் சம்பளம் பெற்றார்களா? என்பதாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். என்கிறார்கள்.