என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
சின்னத்திரையின் பிரபல ஜோடியான ஆல்யா மானசாவும், சஞ்சீவும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். சஞ்சீவ் 'கயல்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆல்யா மானசாவும் இரண்டாவது பிரசவத்துக்கு பின் 'இனியா' தொடரில் அண்மையில் தான் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆல்யா-சஞ்சீவ் தம்பதியினருக்கு ‛ஐலா' என்ற பெண் குழந்தையும் ‛அர்ஷ்' என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆல்யா தனது மகள் ஐலாவுடன் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களில் டான்ஸ் ஆடி வெளியிட்டு வந்தார். அம்மாவை போலவே க்யூட்டாக இருக்கும் ஐலாவுக்கும் சோஷியல் மீடியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சஞ்சீவ் நடிக்கும் கயல் தொடரில் ஐலா பாப்பாவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அண்மையில் வெளியான அந்த எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சஞ்சீவும் ஆல்யாவும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க போகிற போக்கை பார்த்தால் குடும்பமாகவே சீரியலில் நடிப்பார்கள் போல என ரசிகர்கள் ஆல்யா-சஞ்சீவை செல்லமாக கிண்டல் செய்து வருகின்றனர்.