''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஜய் டிவியில் நான்கு வருடங்களுக்கு முன்பு 2019ல் ஆரம்பிக்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சமையலுடன் நகைச்சுவையும் கலந்து உருவாக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
சினிமா, டிவி பிரபலங்கள் 'குக்' ஆக கலந்து கொள்ள, நகைச்சுவை தெரிந்த சிலர் கோமாளிகளாக கலந்து கொண்டனர். தற்போது 4வது சீசன் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் முதல் சீசனிலிருந்து கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருந்து வந்தார். இந்த நான்காவது சீசனின் இரண்டாவது வாரத்திலிருந்துதான் மணிமேகலை கோமாளியாக வந்தார். நான்கு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிமேகலை, இன்றைய நிகழ்ச்சியுடன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
“குக் வித் கோமாளி, இன்று என்னுடைய கடைசி எபிசோடு. குக் வித் கோமாளியில் முதல் சீசனிலிருந்தே என் மீது அனைவரும் அன்பைப் பொழிந்தனர். எனக்குக் கிடைத்த வாய்ப்பில் என்னுடைய கூடுதலான முயற்சியுடன் சிறந்ததைச் செய்ய முயற்சித்தேன். இந்த குக் வித் கோமாளியிலும் உங்கள் அனைவரும் கொஞ்சம் என்டர்டெயின் செய்துள்ளேன் என நினைக்கிறேன். நான் என்ன செய்தாலும் அதற்கு அதே அன்பைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சியிலிருந்து பாதியில் மணிமேகலை விலகியதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சீசனின் ஆரம்பத்திலேயே கோமாளியாக இருந்த ஓட்டேரி சிவா, நீக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த சீசனில் கோமாளிகள் தேர்வு சரியாக இல்லை என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். புகழ் கூட செய்ததையே திரும்பத் திரும்ப செய்கிறார் என்ற விமர்சனங்களும் உள்ளது. மணிமேகலை போன்ற ஜாலியான கோமாளி விலகுவது நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரிய வரும்.