2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

குக் வித் கோமாளி சீசன்-4 கடந்த வாரம் முதல் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் இன்று மிகவும் பிரபலமாகி சினிமா, சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அடுத்துக்கட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முறை குக்குகளாக சில புது பிரபலங்களுக்கும், கோமாளிகளாக புது நகைச்சுவை நடிகர்களுக்கும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓட்டேரி சிவா என்ற நகைச்சுவை நடிகர் புதிய கோமாளியாக எண்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இரண்டு எபிசோடுகளிலேயே அவர் நீக்கப்பட்டுள்ளார். ஓட்டேரி சிவா நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதல்நாளே அதிகமாக குடித்து வந்துள்ளார். தொடர்ந்து அவரது செயல்களும் பிடிக்காமல் போகவே அவர் நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஓட்டேரி சிவாவுக்கு பதிலாக மொக்க ஜோக் டைகர் கார்டன் தங்கதுரை கோமாளியாக எண்ட்ரி கொடுக்கிறார்.
எப்படியாவது நம் முகம் சினிமாவில், டிவியில் ஒருநிமிடம் தெரிந்துவிடாத என நடிகாராகும் ஆசையுடன் லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓட்டேரி சிவாவுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்தும் அதன் அருமை தெரியாமல் இப்படி செய்துவிட்டாரே என பலரும் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.