ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து பிரபலமானவர் ஸ்ரீது கிருஷ்ணன். தமிழில் பல தொடர்களில் நடித்திருந்தாலும் 'ஆயுத எழுத்து' தொடர் தான் ஸ்ரீதுவுக்கு ஹீரோயின் அந்தஸ்தை கொடுத்தது. சிறிது காலமே அந்த தொடரில் நடித்திருந்தாலும் இளைஞர்களின் மனதை கவர்ந்து பலரையும் தன் ரசிகர்களாக மாற்றினார். ஜீ தமிழில் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கினார். அதன்பின் தமிழ் தொலைக்காட்சி பக்கமே அவரை பார்க்க முடியவில்லை. மலையாள தொடரில் மட்டும் நடித்து வருகிறார். எனவே, தமிழ் ரசிகர்கள் பலரும் அவரை இன்ஸ்டாவில் பாலோவ் செய்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர் அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் கெட்டப்பை மாற்றி போஸ் கொடுத்துள்ளார். நியூ ஸ்டைலில் அவரை பார்க்கும் ரசிகர்கள் 'என்ன இப்படி மாறிட்டாங்க?' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.