குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் சென்ற வாரத்தில் ஒருநாள் திடீரென தனது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மறுநாளே வெட்டிங் தேதியுடன் தனது காதலர் யார் என்பதையும் அறிமுகம் செய்து வைத்தார். தொகுப்பாளர் மற்றும் நடிகரான மால் மருகன் தான் ஸ்வேதா பண்டேகரின் காதலர் என்பது பலருக்கும் இன்பம் கலந்த அதிர்ச்சியை தந்தது. ஸ்வேதாவின் இந்த திடீர் திருமண அறிவிப்பு பலருக்கும் ஷாக்கிங்காக இருந்தாலும் பல நாள் காதலரை அவர் மணம் முடிக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் வாழ்த்து மழை பொழிந்தனர்.
இந்நிலையில் டிச.,4ல் ஸ்வேதா பண்டேகர் - மால் மருகன் திருமணம் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது நடைபெறும் ஹல்டி சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ஸ்வேதா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகின்றன. சக நடிகர்களும், ரசிகர்கள் என பலதரப்பினரும் ஸ்வேதாவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.