'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முகம் பதித்தவர் ராமர். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய நபராக கலந்து கொண்டு வருகிறார். என்னதான் தொலைக்காட்சி பிரபலம் என்ற போதிலும், ராமர் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி என்றும் பெயரெடுத்துள்ளார். ராமர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சக விஜய் டிவி தோழர்களான டைகர்கார்டன் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களை அவர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து ராமரின் இந்த வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.