யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' |

கலர்ஸ் தமிழின் 'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தொடர்ந்து 'சித்தி' சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்து வந்தார். தவிர மாடலிங்கில் கலக்கி வந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சித்தி 2 சீரியல் சிலமாதங்களுக்கு முன் நிறைவுற்றது. இதனையடுத்து ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டை கட்டி சென்றுவிட்டார். இதனால் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாகவுள்ள சீரியலில் அக்னி, தினேஷ், நிவிஷா மற்றும் ராதிகா ப்ரீத்தி ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்க இருந்தனர். தற்போது அந்த தொடரிலிருந்து ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்க உள்ளார். ப்ரீத்தி ஷர்மா இந்த தொடரில் அக்னிக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியானது ப்ரீத்தி ஷர்மா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சீரியல் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.




