தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆல்யா தனது இரண்டு குழந்தைகளுடனும் ஜாலியாக நாட்களை கழித்து வருகிறார். இதற்கிடையில் பலரும் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிப்பரா? எப்போது சின்னத்திரையில் வருவார்? என அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். முன்னதாக இதற்கு பதிலளித்த ஆல்யா, தான் இப்போது குழந்தை வளர்ப்பதில் ஜாலியாக இருப்பதாகவும் விரைவில் பிட்னஸ் மற்றும் இதர விஷயங்களை சரிசெய்து நடிக்க வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, 'நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.