காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் அனிதாவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. நடிப்பதில் ஆர்வமுள்ள அனிதா பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அந்த வகையில் தமிழில் 'சர்க்கார்', 'காப்பான்', உள்ளிட்ட பல பாடங்களில் செய்திவாசிப்பாளர், ஆங்கர் என சில நிமிட காட்சிகளில் தோன்றினார்.
அதன்பிறகு வரலெட்சுமி சரத்குமாரின் 'ஜானி' திரைப்படம் அவருக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை வழங்கியது. தற்போது விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' படத்தில் விமலுக்கு தங்கையாக படம் முழுக்கவே வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வந்த அனிதா அண்மையில் புதுவீடு வாங்கியதை மிகவும் உருக்கமாகவும் மகிழ்ச்சியுடனும் பதிவிட்டிருந்தார்.
அனிதா மற்றும் அவரது கணவர் பிரபாவின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பலரும் வாழ்த்தினர். இந்நிலையில், தற்போது அனிதா அவரது கணவருடன் ஜாலியாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஆனால் திருமணநாளை கொண்டாட அவர்கள் போட்ட ப்ளான் விசா சரியாக கிடைக்காமல் சொதப்பி விட்டது. அதுமட்டுமல்லாமல் அனிதாவும், பிரபாவும் தனித்தனியாக தான் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் தம்பதிகள் இருவரும் தங்களது முதல் வெளிநாட்டு டூரை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.