பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளம் நடிகை சோபியா மணிகண்டன் தனது மகனுடன் பங்கேற்கிறார். யார் இந்த சோபியா மணிகண்டன்? என நெட்டிசன்கள் நெட்டை துலாவி வந்த நிலையில் அவர் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் டான்சராக முதலில் அறிமுகமானார் சோபியா. இவருக்கும் சீரியல் நடிகர் மணிகண்டனுக்கும் இடையே காதல் மலர, கடந்த 2016ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மணிகண்டன் வெள்ளித்திரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஜோடியாக விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில், அவர் ஜீ தமிழின் சூப்பர் மாம் சீசன் 3 மூலம் மீண்டும் சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். சோபியா வெள்ளித்திரையிலும் 'லெஷ்மி', 'கவண்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.