ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சின்னத்திரை தொகுப்பாளினியான அர்ச்சனா தமிழின் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலுமே பணிபுரிந்துள்ளார். அந்த வகையில் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் முதன் முதலில் என்ட்ரியாகி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் ஜீ தமிழின் 'சூப்பர் மாம்'. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகைகள் தங்கள் குழந்தைகள் அல்லது தாயாருடன் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதிய பரிமாணத்தில் வந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அர்ச்சனா - சாராவின் காம்போவும் மக்கள் மத்தியில் அதிக அளவில் ரீச்சானது.
சாராவின் திறமையான ஆங்கரிங், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அர்ச்சனாவுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகளுக்காக சாரா வெளியிட்ட மெட்சூர்டான பதிவு என தனது செயல்களால் தாயை மிஞ்சிய குழந்தையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் மூலம் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். தற்போது அர்ச்சனாவை காட்டிலும் சாராவுக்கான ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், டாக்டர் படத்திற்கு பிறகு அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அர்ச்சனா - சாரா காம்போவில் 'சூப்பர் மாம் -3' நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் தங்களது குழந்தைகளுடன் சீரியல் நடிகைகள் அபிதா, ரோஷினி, சசிலயா, மீராகிருஷ்ணன் மற்றும் லெஷ்மிப்ரியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் செல்லக்குழந்தைகளை பார்க்கவும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் அர்ச்சனா - சாராவின் நிகழ்ச்சி தொகுப்பை ரசிக்கவும் நேயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சூப்பர் மாம் சீசன் 3 வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.