இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வருகிற 31ம் தேதி புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி திருவிழா. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்ப இருக்கிறது.
அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மகான் படம் ஒளிபரப்பாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் விக்ரம், அவரது மகன் துருவ் முதன் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள். இவர்களுடன் சிம்ரன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தார்கள். தாதாவான தந்தையை போலீஸ் மகன் துரத்தி பிடிக்கும் கதை. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 02 (ஆக்சிஜன்). ஜி.எஸ்.விக்னேஷ் என்ற புதுமுகம் இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருந்தார், விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார்.
ஒரு பேருந்து விபத்தில் பூமிக்குள் சிக்கிக்கொண்ட சுவாச பிரச்சினை கொண்ட தன் 8 வயது மகனை நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபல சிறுவன் ரித்து என்கிற ரித்திக் நடித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படம் தற்போது விநாயகர் சதுர்த்தி அன்று காலை 11 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.