ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
எப்பொழுதும் நேயர்களுக்கு பொழுதுபோக்கினை வழங்கி வரும் ஜீ நெட்வொர்க், தற்போது ஒரு திரில்லிங்கான மெகாஹிட் வாரயிறுதி கொண்டாட்டத்துடன் வருகிறது. ஸ்பைடர்மேன் படங்கள் வரிசையில் சமீபத்தில் வெளியாகி, பலராலும் விரும்பப்பட்ட ஒரு படம் ‛ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்'. இதில் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று ஸ்பைடர்மேன்கள் வந்து அசத்தினர். ஸ்பைடர்மேன்களாக ரசிகர்களை கவர்ந்த டாம் ஹாலண்ட், ஆண்ட்ரூவ் கார்பீல்டு, மற்றும் டோபி மெக்வாயர் ஆகிய மூன்று ஸ்பைடர்மேன்கள் நடித்தனர்.
அனைத்து தலைமுறையை சேர்ந்தவர்களின் அன்பையும் ஒருங்கிணைக்கும் விதமாக, மூன்று பீட்டர் பார்க்கர் கதாபாத்திரங்களும் ஒருங்கிணைந்து தீமையை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளைக் கண்டு அனைத்து ஸ்பைடர்மேன் ரசிகர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடவுள்ளனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்ததோடு, அதிக வசூல் சாதனையும் புரிந்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. உலகளவில் இதுவரை அதிக அளவு வசூலை ஈட்டிய திரைப்படங்களில் நான்காவது இடத்தை இத்திரைப்படம் பெற்றது.
இந்த படத்தை வெள்ளித்திரையில் மிஸ் செய்தவர்கள் இப்போது டிவியில் நேரடியாக உங்களை தேடி வர உள்ளது. ஆம் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம் உள்ளிட்ட ஜீ குழும டிவிக்கள் அனைத்திலும் ஒளிபரப்பாக உள்ளது. ஆக.,21ல் ஜீ தமிழில் மாலை 5 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகிறது. இதுதவிர ஆகஸ்ட் 21 அன்று ஜீ சினிமாலும், ஜீ தமிழ், ஜீ பஞ்சாபி, ஜீ பிக்சர் உள்ளிட்ட சேனல்களிலும், ஜீ சர்தக் மற்றும் ஜீ பங்களா சினிமாவில் ஆகஸ்ட் 28 அன்றும், ஜீ யுவாவில் செப்டம்பர் 3 அன்றும், ஜீ கேரளம் சேனலில் செப்டம்பர் 7 அன்றும் ஒளிபரப்பாகவுள்ளது.