தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா |
கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியான படம் ஐங்கரன். 3 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்த இந்த படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியானது. இந்த படத்தை ரவி அரசு இயக்கி உள்ளார். ஹீரோவாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடித்துள்ளனர். காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் ஜி. மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.
மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான மதி பல்வேறு எந்திரங்களையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி, அவற்றுக்கான அரசாங்க காப்புரிமையைப் பெற முயற்சிக்கிறார். ஆனால் அது பலனில்லாமல் போய்விட்டது. ஒரு நாள் அவர் ஒரு பணக்கார தொழிலதிபரின் கோழிப்பண்ணைக்கு சென்று அங்கு அவர் கோழி இறைச்சியில் ஸ்டெராய்டுகளை சேர்ப்பதை வீடியோவாக பதிவு செய்து அதை ஆன்லைனில் வெளியிடுகிறார். இதேபோல் அவர் சுரங்க பாதை ஒன்றில் மிகவும் ஆபத்தான நகை திருடும் கும்பலையும் சந்திக்கிறார். அத்துடன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். மதி தனது கண்டுபிடிப்புகள் மூலம் இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இந்த படம் நாளை (21-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி மற்றும் 5 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.