நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

கமரகட்டு, விந்தை, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனீஷாஜித். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கினார். உயிரே, அம்மன் தொடர்களில் நடித்த அவர் கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.
விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பேசிய படி சம்பளம் தரவில்லை. 6 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளனர். தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கினார்கள். படப்பிடிப்பில் சரியான பாதுகாப்பு இல்லை. சின்ன சின்ன விபத்து ஏற்பாட்டாலும் அதையும் தாங்கிக் கொண்டு நடிக்க வேண்டியது இருந்தது. கொரோனா காலத்தில்கூட விடுமுறை தராமல் வேலை வாங்கினார்கள். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.