கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சரத்குமார் நடித்த 'கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மனீஷாஜித். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் நண்பர்கள் கவனத்திற்கு, திறப்பு விழா, கமரகட்டு, விந்தை, இதயதாமரை, பிழை, அட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்ற அவர் உயிரோ, கன்னத்தில் முத்தமிட்டால் தொடர்களில் நடித்தார். தற்போது அவர் மீண்டும் 'உதிர்' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக, ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் 'உதிர்'. இது கதையல்ல நிஜம் படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன் மற்றும் விதுஷ் நாயகர்களாக நடிக்கிறார்கள். மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, ஓ.எஸ்.மணி, சிஸ்ஸர் மனோகர், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக ஜி.வி.சன்மதி நடித்துள்ளார்.
படம் பற்றிய இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா கூறியதாவது: படிக்கும் போது வரும் காதல் சரியா, தவறா என்பதை மையமாகக் கொண்டு, படம் உருவாக்கப் பட்டுள்ளது. சிலையை பார்க்கும் கண்களுக்கு கடவுளாகவும், கற்சிலையாகவும் மாறுபட்டு தெரிகிறதோ, அதேபோல் காதலும் சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்று மாறுபட்டு தெரியும். பாடல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் உண்மையான காதல் என்று அடையாளம் காட்டும் படமாக இது இருக்கும். என்றார்.