புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மஹிந்திரா பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் தயாரிக்கும் படம் சங்கர்ஷனா. இந்த படத்தில் சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். ஆதித்யா ஸ்ரீராம் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது: இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நிலையில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துதுள்ளோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம். என்றார்.