போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகை உமா ரியாஸ் சினிமா, சீரியல் என அனைத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் சிறிது காலம் திரையில் தோன்றாத உமா ரியாஸ் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் தற்போது கயல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்படும் பிரபலமாக மாறியுள்ளார்.
இந்நிலையில், உமா ரியாஸின் திருமணநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உமா ரியாஸ் திருமண தினத்தன்று கணவருடன் பார்க், பீச், ஷாப்பிங் என போகாமல், சாலையோரம் பொம்மை வியாபாரம் செய்யும் பெண் மற்றும் அவரது மகளை சந்திக்கிறார். வீடு இல்லாமல் ரோட்டோரத்திலேயே வசிக்கும் அவர்களுக்கு உமா ரியாஸ் உணவு வாங்கி தந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். பின் அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான உடை, செருப்பு ஆகியவற்றை வாங்கி கொடுக்கிறார்.
இவையணைத்தும் தற்போது சோஷியல் மீடியாவில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இதைபார்க்கும் நெட்டிசன்கள் இதெல்லாம் யூ-டியூப் வியூஸ்காக செய்யும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என விமர்சிக்க, உமா ரியாஸின் ஆதரவாளர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பதோடு, உமா ரியாஸின் இந்த செயலையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.