பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபல மலையாளத் தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.பி.கொட்டராக்கராவின் மனைவி சாரதா அம்மையார். மலையாளத்தில் பிரேம்நசீர், மது, மம்முட்டி , கமல்ஹாசன்,உட்பட முன்னணி கதாநாயர்களின் படங்களையும்,, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த படங்களையும், தமிழில் தனிமரம் என்ற படம் உட்பட 30 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார்.
80 வயதான அவர் சென்னையில் அவரது மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்தார். ரவி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கிறார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினையில் அவஸ்தைப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




