செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சின்னத்திரையை பொருத்தவரை டிஆர்பியில் யார் முதலிடத்தில் வருகிறார்கள் என்ற போட்டி இப்போது கடுமையாக நிலவி வருகிறது. இதில் புது வரவாக வந்துள்ள கலர்ஸ் தமிழ் டிவி பல ரியாலிட்டி ஷோக்களையும், சீரியல்களையும் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் சீரியல் உலகில் முற்றிலும் புதுமையான கதைக்களத்துடன் புது சீரியலை கலர்ஸ் தமிழ் தயாரித்து வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியாகவுள்ள 'ஜமீலா' என்ற புதிய சீரியல் முதன்முறையாக முஸ்லீம் மக்களின் வாழ்வியலை பேச உள்ளது. இந்த புதிய சீரியலின் டீசர் வெளியாகிவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் 'ஜமீலா' தொடர் குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜமீலா தொடர் வருகிற ஆகஸ்ட் 22 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.