நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் | கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கே 20 லட்சம் லைக்ஸ் வாங்கிய சமந்தா | இரண்டு முக்கிய ரீமேக் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாமி பட வில்லன் நடிகர் இறந்ததாக வதந்தி | அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் |
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய புகழை தமிழ்நாட்டில் பெற்று தந்தது. இருப்பினும், ஓவியாவுக்கு சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ சரிவர அமையவில்லை. தற்போது நீண்ட நாட்கள் கழித்து அவர் நடிப்பில் 'பூமர் அங்கிள்' என்ற படம் வெளியாகவுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக்குக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெரிய பட்ஜெட் படங்களில் முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க வேண்டிய ஓவியாவுக்கு இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ப்ராஜெக்ட்டுகள் தான் கிடைத்து வருகிறது. இதனால் ஓவியா தனது கவனத்தை மீண்டும் சின்னத்திரை பக்கமே செலுத்தியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் ஓவியா நடுவராக பங்கேற்க உள்ளார். இதில் ஓவியாவுடன் நடிகை சினேகா, சங்கீதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் போன்றோரும் நடுவராக பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவியா, பாபா பாஸ்கர் மற்றும் பிறர் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.