செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வென்றார்கள். தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் முன்னேறி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் படப்பிடிப்புகள் கடந்த 15ம் தேதி நிறைவடைந்து விட்டது. இதனை இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் சிவாங்கி தெரிவித்துள்ளார். டைட்டில் வென்றது யார் என்பது வருகிற எபிசோட்களில் தெரியவரும். இதன் 4வது சீசனுக்கு சேனல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.