தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்த தொடர் மீரா. கடந்த மார்ச் 28 முதல் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான மற்றும் இனிமையான உறவுகள் குறித்த அனுபவங்கள் கதையாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனை குஷ்பு தனது அவ்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்தார். குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், அக்ஷயாக உள்பட பலர் நடித்தார்கள். கதையை குஷ்பு எழுத, ஏ.ஜவஹர் இயக்கினார். 62 எபிசோட்களே ஒளிபரப்பான நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக குஷ்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது: எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும். வந்துவிட்டது. நாம் தொடர விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. எனது குழுவுடன் மீண்டும் வருவேன். அதுவரை காத்திருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.




