கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
ஓடிடி தளங்களில் சினிமா தாராளமாக கிடைப்பதால் பெண்களும் தற்போது ஓடிடி பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும்போது தொலைக்காட்சி தொடர்கள் நிலைநிறுத்திக் கொள்ள புதிதாக எதையாவது செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி முதன் முறையாக இஸ்லாமிய குடும்ப பின்னணியில் இஸ்லாமிய இளம் பெண்ணின் வாழ்க்கையை தொடராக்கி உள்ளது.
பாடகியாக மாறி சாதனை படைக்க நினைக்கும் இஸ்லாமிய பெண் ஜமீலா தனது குடும்பத்திலும், சமூகத்திலும். இசைத் துறையிலும் சந்திக்கும் பிரச்சினைகள்தான் தொடரின் திரைக்கதை. இதில் ஜமீலாவாக பிரபல நடிகை தன்வி ராவ் நடித்துள்ளார். ரங்பிரங்கி, கன்ஸ் ஆப் பனாரஸ், குலாப் கேங் போன்ற படங்களில் நடித்துள்ளவர் தன்வி ராவ். ஜமீலாவின் தாயாக நடிகை ஐஸ்வர்யா நடிக்கிறார். அக்., 10ம் தேதி ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.