‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சீரியல் ஷூட்டிங்கின் போது தீ விபத்திலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகுமார். 'வானத்தைப் போல' தொடரில் நாயகனாக ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இந்த தொடரானது நடிகர்கள் மாற்றத்தால் சில சறுக்கல்களை சந்தித்தாலும் இப்போது சூடுபிடிக்க தொடங்கி டிஆர்பியில் முன்னேறி வருகிறது.
இந்நிலையில், கொம்பன் படத்தில் ராஜ்கிரண் சாமியாடி வரும் ட்ராக்கை போல இதிலும் ஒரு எபிசோடை காட்சியாக்கி உள்ளனர். அதில், ஸ்ரீகுமார் கருப்பசாமி வந்து ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சிகளும், எதிரிகளுடன் சண்டையிடும் காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்ரீகுமார் தனது கைகளில் இருந்த தீப்பந்ததால் பைட்டர் ஒருவரை அடிக்க, தீப்பந்தம் சிதறி ஸ்ரீகுமாரின் காலின் அருகே விழுகிறது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகுமார், பந்தத்தை தன் கால்களால் உடைத்து தள்ளுகிறார். இல்லையெனில் கண்டிப்பாக அவர் ஆடையில் தீப்பிடித்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். ஒருவழியாக அந்த விபத்திலிருந்து ஸ்ரீகுமார் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்துவிட்டார். இந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதேப்போல தி.நகரின் ஒரு பிரபல கடையில் தீ விபத்து ஏற்பட்ட போது ஸ்ரீகுமார் தனது குடும்பத்துடன் மாட்டிக்கொண்டார். அப்போதும் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் அங்கே இருந்து மீட்கப்பட்டார். இந்த இரண்டு செய்திகளையும் ஒப்பிட்டு 'ஸ்ரீகுமார் சார் உங்களுக்கு நெருப்புல கண்டம்... பாத்து ஜாக்கிரதை' என கருத்து பதிவிட்டுள்ளனர்.