கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிக்பாஸ் சீசன் 5ல் அதிகம் பேசப்பட்ட ஜோடி அமீர் - பாவ்னி ரெட்டி தான். இன்றளவும் இவர்கள் காதலிக்கிறார்களா? இல்லையா? என மண்டையை பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2-ல் இருவரும் ஜோடியாக இணைந்து நடனமாடி வருகின்றனர். ரசிகர்களுக்கும் இந்த ஜோடியை மிகவும் பிடித்துப்போக இருவரது ஜோடி பொருத்தமும் சூப்பர் என வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 3ம் தேதி நடைபெறவுள்ள பிக்பாஸ் ஜோடிகள் எபிசோடில் கண்ணன் - ராதை வேடத்தில் இருவரும் பெர்பாமன்ஸ் செய்துள்ளனர். இதற்கான ப்ரோமோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
அதில் ஒரு ப்ரோமோவில் அமீர் பற்றி பாவ்னி பெருமையாக பேச ஆரம்பிக்க பாவ்னியின் அக்கா சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது, 'அமீர் தான் பாவ்னியை மாற்றி பிக்பாஸில் ஓப்பனாக பேச வைத்து பிரச்னைக்கு தீர்வு காண வைத்தார். அமீர் - பாவ்னி உறவு பலமாக உள்ளது. எங்களுக்கும் அது மகிழ்ச்சி தான். அமீருக்கு நன்றி' என கூறி விலையுயர்ந்த வாட்சை பரிசாக அளித்தார். அதை பாவ்னி அமீரின் கையில் கட்டிவிடுகிறார். வைரலாக பரவி வரும் இந்த புரோமோவை பார்க்கும் அமீர் - பாவ்னி ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.