அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே'. முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா சார்ல்டன், திரவியம் ராஜ்குமரன், சித்தார்த் குமரன், ஸ்வாதி கோண்டே ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தம்பியும் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி குழப்பத்துடன் ஆரம்பித்துள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரளவு வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், இரண்டாவது ஜோடியாக நடித்து வரும் திரவியம் - ஸ்வாதி ஜோடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்நிலையில், திரவியம் மற்றும் ஸ்வாதி ஜோடியாக போட்டோஷூட் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வர, ரசிகர்கள் 'ஆன் ஸ்கீரினில் மட்டுமல்ல ஆப் ஸ்கிரீனிலும் இது சூப்பர் ஜோடி' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.