லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் |
விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மி ஜெயராஜ். தொடர்ந்து ராஜபார்வை சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த ராஷ்மி, அந்த சீரியல் முடிந்த பின் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்காத ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட ராஷ்மி ஜெயராஜ், அன்றைய தினத்தில் தனது கணவருக்காக சிறப்பு தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ராஷ்மிக்கு அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.