ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்த சின்னத்தம்பி படத்தின் பாணியில் உருவாகி வரும் புதிய தொடர் பச்சக்கிளி. ஒரே ஒரு தங்கையை 3 அண்ணன் பாசத்தோடு வளர்க்கிற கதை. அவளுக்கு மாப்பிள்ளையாக ஒருவன் உள்ளே வருகிறபோது ஏற்படும் பிரச்சினைகளை செண்டிமென்ட் கலந்து சொல்லப்போகிறார்கள்.
இந்த தொடர் வருகிற ஜூலை 4ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மோனிஷா அர்ஷக் பச்சக்கிளியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக தீபக் நடிக்கிறார். இவர்கள் தவிர ஸ்டாலின், அஷ்வின், விஜய் ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.




