டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
ரஜினி… இந்த பேரைக் கேட்டாலே சினிமா உலகம் மட்டுமல்ல சீரியல் உலகமும் அலறுகிறது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் மக்களின் பேவரைட் மெகா தொடர் இது. ஷ்ரேயா சித்து ரஜினியாக நடித்து வருகிறார். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர் இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இத்தொடரில் ரஜினியின் தங்கை ராதிகா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தான் குடிக்கும் காபி காப்பில் தொடங்கி புடவை வரை எதையுமே யாருடனுமே பகிர்ந்து கொள்ள விரும்பாதவர் ராதிகா. செகண்ட் ஹேண்ட் என்கிற வார்த்தையையே கேட்டாலே அலர்ஜி. ஆனால், வீட்டின் சூழல் காரணமாக அக்கா ரஜினியின் காதலன் என்பதே தெரியாமல் அரவிந்தை மணக்கிறாள் தங்கை ராதிகா. தங்கைக்காகத் தன் காதலையே தியாகம் செய்யும் ரஜினி, ராதிகா - அரவிந்தின் திருமணத்தை பல போராட்டங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறாள்.
தன்னை ஐந்து வருடமாக ரகசியமாகக் காதலித்து வந்த அரவிந்தைத்தான் திருமணம் முடித்திருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் ராதிகாவுக்கு, திருமணம் முடிந்து சில வாரங்களே ஆன நிலையில் கணவன் அரவிந்த் அக்கா ரஜினியின் முன்னாள் காதலன் என்பது தெரிய வருகிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட எதையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, பகிர்ந்து கொள்ளாத ராதிகா இனி என்ன செய்யப்போகிறாள், ரஜினி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள்?
உண்மைகள் உடையும் தருணத்தில் ரஜினி சீரியலின் இந்த வார எபிசோடுகள் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அக்கா ரஜினியின் தியாகம் சரியா, ராதிகாவின் கோபம் சரியா… ரஜினி ஏன் இந்த தியாகத்தை செய்தாள், அக்கா ரஜினியைப் புரிந்துகொள்ளாமல் பழிவாங்கப்போகிறாளா தங்கை ராதிகா? அத்தனை கேள்விகளுக்குமான விடை இந்த வார ரஜினியில். தினமும் இரவு 9.30 மணிக்கு ஜி தமிழ் சேனலில் ரஜினி சீரியலை காணத்தவறாதீர்!