சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான ஜோசப் என்கிற படம் ஹிட்டாகி இவருக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கேரளாவில் வாகமன் பகுதியில் முறையான அனுமதியின்றி அனுமதி மறுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தனது ஜீப்பில் ரேஸில் ஈடுபட்டார் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர் சங்கத்தினர் போலீசில் அவர் மீது புகார் அளித்தனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் ரேஸில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதையடுத்து வண்டிப்பெரியார் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகன உரிமம் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த வருடம் இதே போன்று நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும் அது அவர்கள் தான் என உறுதியாக தெரியாததால் அவர்கள் வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.