அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி தீவிர அரசியலில் இறங்கினார்.
சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநில நகரி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் ரோஜா, சமீபத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சரான பின் ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் சிரஞ்சீவியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அது குறித்து, “நான் சினிமாவிலிருந்து விலகியதற்கும், ஆந்திர மாநில அமைச்சரானதற்கும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்தது மகிழ்ச்சி. சுரேகா (சிரஞ்சீவி மனைவி) அவர்களுக்கு சிறப்பு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவி, ரோஜா இருவரும் இணைந்து 'முட்டா மேஸ்திரி (1993), முக்குரு மொங்கலு (1994), பிக் பாஸ் (1995) ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.