நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் மாலா பார்வதி.. தமிழில் 'இது என்ன மாயம்' மற்றும் 'நிமிர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் புகார் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார் மாலா பார்வதி. இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நடிகர் சங்க செயலருக்கு ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில நாட்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு மீது இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் கூறி போலீஸில் புகார் அளித்தது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்பாபுவை போலீசார் தேடி வரும் நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அவரை நீக்க வேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த நடிகைகளும் மற்றும் சிலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது விஜய்பாபு தானாகவே முன்வந்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன், என்றும் தன் மீது உள்ள குற்றச்சாட்டு பொய் என நிரூபித்து விட்டு அதன்பிறகு மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்கிறேன் என்றும் தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். ஆனால் அப்படி அவர் அனுப்புவதற்கு முன்னதாகவே நடிகர் சங்கம் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற விரக்தியில் தான் தனது ராஜினாமாவை அனுப்பி வைத்துள்ளார் மாலா பார்வதி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நடிகர் சங்கத்தில் புகார் பிரிவில் என்னை நியமித்தபோது உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் நம்மால் நியாயமான முறையில் தீர்வு காணமுடியும் என சந்தோஷத்துடன் இதில் பொறுப்பேற்றேன். ஆனால் தற்போது தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கு இங்கே நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன என்பதால் இதிலிருந்து நான் வெளியேறுகிறேன்” எனக் கூறியுள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாலா பார்வதியின் மகன் ஒப்பனைக் கலைஞரை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானபோது அதுபற்றி விசாரித்து அது உண்மை என தெரிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமே தன் மகன் மீது போலீசில் புகார் கொடுக்கும்படி கூறியவர் தான் இந்த மாலா பார்வதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.