ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி மற்றும் பூவே பூச்சூடவா தொடர்களின் நாயகிகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் தான் இருவருக்குமே திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷபானா விஜய் டிவியில் நடித்து வந்த ஆர்யனையும், ரேஷ்மா தன்னுடன் நடித்த மதன் பாண்டியனையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆப் ஸ்க்ரீனில் நல்ல நட்புடன் பழகி வரும் இந்த இரு தம்பதிகளும் தற்போது ஒன்றாக ஊர் சுற்றி வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரேஷ்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இரு நடிகைகளுமே பகிர்ந்துள்ளனர். அதில் ரேஷ்மா மற்றும் ஷபானா ஒரே மாதிரியான ஆடை அணிந்து நெருக்கமான நட்புடன் அனைத்துக் கொண்டுள்ளனர். அந்த பதிவில் ஷபானா ரேஷ்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் இந்த இரு நடிகைகளுடன் அவர்களது கணவர்கள் மதன் மற்றும் ஆர்யனும் உடன் நிற்க, மறக்க முடியாத தினம் என கேப்ஷனில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் என்ன ஜோடியாக ஹனிமூன் கொண்டாட்டமா? என நக்கல் அடித்து வருகின்றனர்.