அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி மருமகளாக ஐஸ்வர்யா கேரக்டரில் அறிமுகமானார் விஜே தீபிகா. ஆனால், அவர் முகத்தில் இருந்த பருக்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அந்த தொடரை விட்டு விலகினார். அதன் பின் சின்னத்திரையில் தீபிகாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, டான்ஸ், போட்டோஷுட் என மற்ற விஷயங்களில் பிசியாக இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலின் 'சில்லுன்னு ஒரு காதல்' தொடரில் வீஜே தீபிகா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நீண்ட நாள் கழித்து அவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதால் தீபிகாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனக்கு கிடைத்திருக்கும் சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா சின்னத்திரையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.