இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல சமையல் கலைஞரான செப் தாமு, தொலைக்காட்சியில் பல சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர். தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து கலக்கி வருகிறார். இந்த ஷோவில் வரக்கூடிய அனைத்து நபர்களுமே மக்கள் மத்தியில் மாஸ் செலிபிரேட்டிஸ் தான். அந்த வகையில் செப் தாமுவுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தாமுவும் செம ஆக்டிவாக சோஷியல் மீடியாக்களில் அவர்களுடன் உரையாடி வருகிறார்.
இந்நிலையில், சமையலை தாண்டி தனது நடனத்திறமையை தற்போது அவர் அரேங்கேற்றியுள்ளார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடல் உலகளவில் செம ட்ரெண்டாகி வருகிறது. அந்த பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் நடனமாடி பதிவேற்றி வருகின்றனர்.
நமது செப் தாமுவும் 'அரபிக் குத்து' பாடலுக்கு அசத்தலாக நடனமாடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது நடன அசைவுகள் கச்சிதமாக இல்லை என்றாலும், ஸ்போர்டிவாக அவர் ஆடியிருப்பது பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறது. இந்த தாமு வெர்ஷன் ஆஃப் அரபிக் குத்தை பார்த்துவிட்டு ஸ்ருதிகா, ரக்ஷன் ஆகியோர் தாமுவை பாராட்டி வருகின்றனர்.