நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் தொடர்களில் ஒன்று வள்ளி திருமணம். இதில் நக்ஷத்திரா, ஷ்யாம், நளினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த தொடர், தற்போது சற்று சொதப்பி வருகிறது. எனவே, வழக்கம் போல் ஹிட் சீரியல் நடிகை ஒருவரை சிறப்பு வரவாக அழைத்து வந்து சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் வள்ளி திருமணம் தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் நுழைகிறார்.
நாயகன் கார்த்தியின் தோழியாக அறிமுகமாகியுள்ள ஸ்வேதா பண்டேகர், 'பூமிகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வள்ளிக்கு வில்லியாக அவர் இனி இந்த சீரியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்வேதா பண்டேகர் 'சந்திரலேகா' தொடரின் நாயகியாக நடித்து புகழின் உச்சத்தில் உள்ளார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலின் ஆரம்பம் முதல் தற்போது வரை ஸ்வேதா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.