இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' |

பிக்பாஸ் சீசன் 5 -ல் முக்கிய போட்டியாளராக வலம் வந்த தாமரை, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் விளையாடி வருகிறார். இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே பிக்பாஸ் சீசன்-5 போட்டியாளர்களை பற்றி தாமரை தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். 'ராஜு, ப்ரியங்கா என பலரும் பிக்பாஸ் 5 முடிந்ததும் என்னை கண்டுகொள்ளவில்லை. எல்லோருமே நடிக்கிறார்கள்' என்று கூறியிருந்தார். அவர் தற்போது மீண்டும் அமீர் குறித்த சர்ச்சையான விஷயங்களை அல்டிமேட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அமீர் ரசிகர்கள் பலரும் தாமரையை சமூக ஊடகங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த விஷயம் அமீர் கண்களில் படவே, அவர், 'நம்மை பற்றி யாராவது நெகட்டிவாக பேசினால் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது நல்லது. எனக்காக நீங்கள் சப்போர்ட் செய்வது பிடித்திருக்கிறது. ஆனாலும், நம்மை பற்றி தவறாக பேசுபவரை நாமும் தவறாக பேச வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள்' என கூறியுள்ளார்.