''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் சில்மிஷம் சிவா. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அவர் தற்போது சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த போது மொழி தெரியாத காரணத்தால் பிச்சைக்காரன் போல தான் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், 'கலக்கப்போவது யாரும் 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனது போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதிகாலையில் 4 மணிக்கு கலக்கப்போவது யாரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு 6 மணிக்கு ஏர்போர்ட் சென்றேன். அங்கு என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியவில்லை. கடவுள் போல ரசிகர் ஒருவர் வந்து எல்லா உதவிகளையும் செய்து விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது வரை எனக்கு அஜித் சார் படம் என்று தெரியாது. ஹெச் வினோத் படம் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜித் சாரிடம் என்னை சில்மிஷம் சிவா என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அஜித் சார் உடனே என்னிடம் கைகொடுத்து ஹலோ சிவா என்றார். எனக்கு தலை எல்லாம் சுத்தி மயக்கமே வந்துவிட்டது.
ஷூட்டிங் முடிந்ததும் ஹோட்டலுக்கு போனேன். ஆனால், அங்கே மொழி தெரியாததால் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். என்னுடைய போன் பேக் எல்லாம் கேரவேனில் மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிச்சைக்காரன் மாதிரி வெளியே சுற்றினேன். கடைசியில் படத்தின் மேக்கப் குழுவினர் தான் என்னை ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் இது' என கூறியுள்ளார்.