'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

விஜய் டிவியில் நம்பர் ஒன் தொடரான 'பாரதி கண்ணம்மா' தொடரில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரா கண்ணம்மா? என சிலர் கிண்டல் செய்ததை தன் நடிப்பில் வென்று ரசிகர் மனதில் இடம்பிடித்து விட்டார். சீரியலில் நடிப்பதற்கு முன் வினுஷா தேவி ஒரு போட்டோஷூட் மாடல் என்று மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், அவரது உண்மையான புரொபஷனே வேறு. அதை பற்றிய தகவல் தற்போது தான் வெளிவந்துள்ளது.
வினுஷா தேவி ஒரு ஐடி புரொபஷனல். பகல் நேரத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் வினுஷா இரவு நேரத்தில் ஐடி கம்பெனியில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். அவர் மட்டுமல்ல அதே தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அருண் குமாரும் ஐடி துறை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.