மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை | புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா | தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' |

'வானத்தைப் போல' தொடர் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஹிட் அடித்து வருகிறது. இதில், முத்தையா என்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் குமார் நடித்து வருகிறார். இவருக்கு வயது 67.
சமீபத்தில் நடிகர் மனோஜ் குமார் அவரது மனைவி செல்வி மற்றும் உதவியாளர் ரகுபதி ஆகியோருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த மூவருமே படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர் சில நாட்கள் ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் என தெரிய வருகிறது.
ஏற்கனவே இந்த தொடரில் இருந்து ஹீரோ தமன் குமார் ஹீரோயின் ஸ்வேதா மற்றும் சங்கரேஷ் ஆகிய மூவரும் விலகி விட்டனர். தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோஜ் குமாரும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், சீரியல் குழுவினர் சோகமடைந்துள்ளனர்.
நடிகர் மனோஜ் குமார், தமிழில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாரதி ராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.