‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஜய் டிவியின் முக்கிய ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் தனது நகைச்சுவையால் மக்களின் மனதில் கொள்ளை கொண்ட புகழ் படங்களில் நடித்து வந்ததால், சீசன் 3-யில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் புகழ் வரும் புரோமோ சமீபத்தில் வெளியானது.
அதில், கேஜிஎப் ஹீரோ போல் மாஸ் என்ட்ரி கொடுக்கும் புகழ், நேராக சென்று செப் தாமுவின் காலில் மரியாதையாக விழுவது போல் செய்கிறார். இதனை பார்த்த வெங்கடேஷ் பட் புகழை ஓடி வந்து கிண்டலாக எட்டி உதைக்கிறார். பின்னணியிலும் கவுண்டமனியின் கவுண்டருடன் புகழ் கலாய்க்கப்படுகிறார். ஒருபுறம் காமெடியாக மக்கள் மத்தியில் இந்த புரோமோ டிரெண்டாகி வருகிறது.
அதேசமயம், புகழை எட்டி உதைத்ததால் வெங்கடேஷ் பட்டை சிலர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக ஒளிபரப்பான எபிசோடுகளில் போட்டியாளர்களை வெங்கடேஷ் பட் அடிப்பதாக ஏற்கனவே அவர் மீது பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். இதற்கு விளக்கம் அளித்த வெங்கடேஷ் பட், போட்டியாளர்களை உண்மையாக அடிக்கவில்லை நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே அப்படி செய்யப்பட்டது என விளக்கமளித்திருந்தார். நடிகை வித்யுலேகாவும், வெங்கடேஷ் பட்டிற்கு ஆதரவு தெரிவித்து 'இது காமெடி நிகழ்ச்சி, நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பாருங்க' என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




