இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
சந்தானம் நடித்து கடந்த நவம்பர் 19ம் தேதி வெளியான படம் சபாபதி. இதில் சந்தானத்துடன் ப்ரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணா, மயில்சாமி உள்பட பலர் நடித்திருந்தனர். சாம்.சி.எஸ் இசை அமைத்திருந்தார், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.ஸ்ரீனிவாச ராவ் இயக்கி இருந்தார். ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரித்திருந்தார்.
இதில் சந்தானம் திக்குவாய் பிரச்சினை உள்ள இளைஞராக நடித்திருந்தார். திக்குவாய் பிரச்சினை இருந்ததால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார், வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு திடீரென 20 கோடி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. முழுநீள காமெடி படம். ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம்.
இந்த படம் வருகிற 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.