படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
பிரபல மாடல் மற்றும் விளம்பர நடிகையான திவ்யப்ரியா சிவம், முன்னதாக பாலிமர் தொடரில் ஒளிபரப்பான 'ராஜமன்னார் வகையறா' என்ற தொடரில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் ஜீ தமிழின் 'கோகுலத்தில் சீதை' தொடரில் ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நாட்களிலேயே நடிகையாக கனவோடு இருந்த திவ்யப்ரியா சிவம், தனது முதல் போட்டியிலேயே 'மிஸ் ஐகானிக் கோயம்புத்தூர்' பட்டத்தை வென்றார். தொடர்ந்து 'மிஸ் தமிழ்நாடு' 'மிஸ் செளத் இந்தியா' உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியின் தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
திவ்யப்ரியா சிவம் நடித்து வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.