கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'என் பெயர் மீனாட்சி' மூலம் சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ப்ரியா பிரின்ஸ். முன்னாதாக பல சேனல்களிலும், நிகழ்ச்சிகளிலும், செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள ப்ரியா, சமீபத்தில் கண்ணானே கண்ணே தொடரில் மேனகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து அந்த கதாபாத்திரமும் முடித்து வைக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறு யாரும் அதில் நடிக்கவில்லை.
இந்நிலையில் அவர் பழைய மேனகாவாக திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கண்ணான கண்ணே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்த செல்பியை ஷேர் செய்து, தனது கம்பேக்கை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.