நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நுழைந்தவர் அமீர். அவரை பற்றி பலருக்கும் தெரியாது. பிரபல நடன இயக்குநரான அமீர் சமீபத்தில் நடைபெற்ற பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் கதவுகள் திறக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் வீட்டில் காதல் சிறகடித்து பறந்து வரும் அமீர் பற்றி பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். அவரை பற்றி சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
அமீர் தனது 16 வயதிற்குள்ளாகவே தாய் - தந்தையரை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை அஷ்ரப் என்பவர் தான் பொறுப்புடன் வளர்த்தார். சிறுவயதில் ஆர்மியில் சேர வேண்டும் என விருப்பம் கொண்ட அமீர் அதற்காக எவ்வளவோ முயற்சி செய்து பாதுகாப்புத் துறைக்கு படித்தார். ஆனால், அவரால் ஆர்மியில் தேர்வு பெற முடியவில்லை. நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாகத்தான் தேசியக் கொடியை அவரது கைகளில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
ஆர்மியை தவிர டான்ஸிலும் அதிக ஈடுபாடு கொண்ட அமீர், பிரபுதேவாவின் தீவிர ரசிகர். அதன்பின் நடனம் கற்றுக்கொண்ட அமீர் இன்று ஏடிஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக்குழுவை ஆரம்பித்துள்ளார். அந்த குழு இந்திய அளவில் பல நடன போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிக்பாஸில் அமீர் செய்யும் சேட்டைகள் சிலரை கடுப்பேற்றியும் சிலரை கவர்ந்தும் வருகிறது. ஆனால், அவருடைய வாழ்க்கை கதை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.