'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் வைதேகி காத்திருந்தாள். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
காணாமல் போன வைதேகியாக நடித்துக் கொண்டு ஒரு பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் சரண்யா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது. காணாமல் போன வைதேகியே அவர்தான் என்று. வைதேகியை பிரஜின் காதலிக்கிறார். இந்த பிரச்சினைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாகிறது.