வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
பிக்பாஸ் மதுமிதா பாத்டப்பில் ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் ஜெர்மனியில் இருந்து வந்து கலந்து கொண்டார் மதுமிதா. சில வாரங்கள் நிகழ்ச்சியில் தாக்குபிடித்த மதுமிதா இருவாரங்களுக்கு முன் மிகவிரைவிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து 6-வது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு வெளியே வந்த மது, நான் எலிமினேட் ஆனது நல்லது தான். என்னுடைய மொழி பிரச்னையால் என்னால் யாரிடமும் பேசி புரிய வைக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஒருநாளோ, நூறு நாளோ பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு புகழ் வெளிச்சம் என்பது எளிதாக கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் மதுவுக்கு தற்போது ரசிகர்களும், சோஷியல் மீடியாக்களில் பாலோயர்களும் கிடைத்துள்ளனர். இந்நிலையில் மதுமிதா பாத்டப்பில் படுத்து ஹாட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி தொடங்கியுள்ள நிலையில், இனி மதுமிதாவும் போட்டோஷூட்டில் பிசியாகி விடுவார் என அனைவரும் பேசி வருகின்றனர்.